ADDED : மே 28, 2026 11:12 AM

அ நிறம் | அளவு
நபிகள் நாயகத்தை சந்தித்த ஒருவர், ''துாதரே... உறவினருடன் ஒற்றுமையாக வாழ விரும்புகிறேன். ஆனால் அவர்களோ என்னை புறக்கணிக்கின்றனர். நன்மை செய்தாலும், அவர்கள் எனக்கு தீமையே செய்கின்றனர். பொறுமையுடன் இருந்தாலும் தீங்கு செய்வதை அவர்கள் நிறுத்தவில்லை'' என வருந்தினார்.
''நீங்கள் சொல்வது உண்மையாக இருந்தால், அந்த உறவினர்களின் எதிர்காலம் மோசமாக இருக்கும். பிறர் செய்யும் தீமைகளை எந்தளவுக்கு பொறுத்துக் கொள்கிறீர்களோ, அந்தளவுக்கு இறைவன் நன்மை தருவான். நல்லவர்களை அலட்சியம் செய்பவன் தன் தலையில் தானே மண்ணை அள்ளிப் போட்டவன் ஆவான்'' என்றார்.
