தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இஸ்லாம்/கதைகள்/உயர்ந்தவர் யார்

உயர்ந்தவர் யார்

உயர்ந்தவர் யார்


ADDED : ஜூன் 03, 2026 11:55 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 03, 2026 11:55 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பனுாதமீம் கோத்திரத்தை சேர்ந்த சிலர் மெதீனாவில் இருந்த நபிகள் நாயகத்தைக் காண வந்தனர். ''நபியே... எங்களின் பணபலம், பெருமைகளை எடுத்துச் சொல்வதற்காக வந்தோம்'' என்றனர்.

அவர்களில் ஒருவரான உதாரிது என்பவர், ''இறைவன் எங்களுக்கு பணத்தை அள்ளித் தந்தான். அத்துடன் மற்றவரை விட நாங்கள் வலிமையானவர்கள். எங்களை விட உயர்ந்தவர்கள் இருக்கிறார்களா...'' என்றார்.

அருகில் நின்ற தாபிதுப்னு கைஸ் என்பவரை அழைத்தார் நாயகம். அவரோ தங்களைப் பற்றி சொல்லத் தொடங்கினார், ' நாயகத்தை தேர்ந்தெடுத்து இறை துாதராக்கினான். சத்தியம், ஒழுக்கம் தவறாத அவரிடம் நாங்கள் அனைவரும் அமைச்சராக இருக்கிறோம். அவன் கருணையால் தர்ம வழியிலேயே வாழ்க்கை நடத்துகிறோம்'' என்றார் கைஸ்.

அடுத்ததாக பனுாதமீம் கோத்திரத்தைச் சேர்ந்த கவிஞர் ஸிப்ரிகான் பாடல்களை பாடினார். அதைப் போல நாயகத்தின் சார்பாக ஹஸ்ஸான் பாடினார். கடைசியில் தற்பெருமை பேசிய பனுாதமீம் கோத்திரத்தினர் மன்னிப்பு கேட்டனர். அனைவருக்கும் விலை உயர்ந்த பொருட்களை நாயகம் கொடுத்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us