ADDED : ஜூன் 11, 2026 11:10 AM

பாபிலோனை ஆட்சி செய்த கொடுங்கோல் மன்னர் நம்ரூத். ஆணவம் கொண்ட இவரைக் கொல்ல ஒரு ஆண் குழந்தை பிறக்கப் போவதாக குறி சொல்பவர்கள் தெரிவித்தனர்.
அந்தக் குழந்தை பிறக்கக் கூடாது என பல திட்டங்களை தீட்டினான். ஆனால் எதுவும் நடக்கவில்லை. ஒருவழியாக யாருக்கும் தெரியாமல் மலை பொந்துக்குள் பிறந்தது ஒரு குழந்தை. அதை அங்கேயே விட்டுச் சென்ற தாய், பிறந்ததும் குழந்தை இறந்ததாக பொய் சொன்னாள். அவளுடைய கணவர் ஆஜர் அதை நம்பினார். அரண்மனைக்கு பாதுகாப்பு பணியாளரான ஆஜர் வேலைக்குச் சென்ற நேரத்தில் குகைக்கு சென்று குழந்தையை கவனித்தாள். இப்றாஹீம் என பெயர் சூட்டப்பட்ட அந்தக் குழந்தையின் வளர்ச்சி அதிசயத்தக்கதாக இருந்தது. 15 மாதங்களில் 15 ஆண்டு வளர்ச்சி அடைந்தது. குகைக்குள் இருந்த காலம் மூன்று ஆண்டுகள் மட்டுமே.
ஒருநாள் அவள், ''குழந்தை பிறந்ததும் இறந்ததாகச் சொன்னேன் அல்லவா. அது பொய். அவன் வாலிபனாக குகையில் வாழ்ந்து வருகிறான்'' என்ற உண்மையை கணவரிடம் சொன்னாள்.
இதைக் கேட்டதும், ''அப்படியா... எங்கே என் மகன்'' என அவர் ஆனந்தக்கண்ணீர் விட்டார். உடனே குகைக்கு அழைத்துச் சென்றாள். அங்கே அழகிய தோற்றத்துடன் வாலிபன் நின்றிருந்தான். மகிழ்ச்சியுடன் வீட்டிற்கு அழைத்து வந்தனர்.
