ADDED : ஜூன் 18, 2026 09:06 AM

ஒரு நாள் குளக்கரை அருகே நடந்து சென்றார் முல்லா. அப்போது அவர் கல் தடுக்கி விழப் போக, அவருக்கு பின்னால் வந்த நபர் தாங்கிப் பிடித்தார். முல்லாவும் நன்றி சொல்லி புறப்பட்டார். இதன் பின் முல்லாவை பார்க்கும் போது, 'உங்களை நான் தான் காப்பாற்றினேன்' என்றார்.
கடுப்பான முல்லா இதற்கு முடிவு கட்ட எண்ணினார். ஒரு பண்டிகை நாளில் குளக்கரைக்கு சென்ற போது அந்த நபரும் அங்கிருந்தார். அவரைக் கண்டதும் முல்லா குளத்தில் நீந்த ஆரம்பித்தார். சற்று துாரம் சென்றதும் கரையில் நின்றவர்களை பார்த்து, 'ஒருமுறை குளக்கரையில் கல் தடுக்கிய போது அதோ இருக்கிறாரே அவர் தான் என்னை காப்பாற்றினார். இந்த உதவியை என்னால் மறக்க முடியாது'' என அழுதார்.
மக்களோ சிரித்தனர். 'அசகாய சூரனான முல்லாவுக்கு இவர் உதவி செய்தாரா... பலசாலியான முல்லா தானே இவருக்கு உதவி செய்தவரைப் போல இருக்கிறார்'' என கிண்டல் செய்தனர். இதைக் கேட்ட அந்த நபர் வாயடைத்துப் போனார்.
