ADDED : ஜூன் 25, 2026 10:48 AM
அறிஞர் இமாம் அபூஹனீபா துணி வியாபாரம் செய்தார். துணியின் குறைகளை மறைத்து பொய் சொல்ல இவர் விரும்ப மாட்டார்.
ஒருநாள் தன் பணியாளரிடம் குறிப்பிட்ட பட்டுத் துணியைக் காட்டி, ''இந்த துணியின் ஓரத்தில் நுால் பிரிந்துள்ளது. இதன் குறையை சொல்லி பணத்தை குறைவாக வாங்கிக் கொள்'' எனச் சொல்லியிருந்தார். ஒருநாள் அவர் வெளியே சென்ற நேரத்தில் வாடிக்கையாளர் ஒருவர் வந்தார். கவனக்குறைவால் அந்த பட்டுத்துணியின் குறையை சொல்லாமல் முழு விலைக்கு விற்றார் பணியாளர்.
மாலையில் கடைக்குத் திரும்பிய இமாம் நடந்ததை அறிந்து கவலைப்பட்டார்.
'குறையுள்ள பொருளை முழு விலைக்கு விற்ற பணம் வேண்டாம்' எனக் கூறி அந்த வாடிக்கையாளரைத் தேடிச் சென்றார். அவரிடம், ''என் பணியாளர் தவறுதலாக குறை உள்ள துணியை தங்களிடம் விற்று விட்டார். இதோ கூடுதல் பணத்தை திருப்பி கொடுக்க வந்தேன்'' என்றார்.
வாடிக்கையாளர் வியப்பில் ஆழ்ந்தார்.
நேர்மையே வெல்லும். அதற்கு அழிவே கிடையாது.
