ADDED : ஜூன் 25, 2026 10:56 AM

அ நிறம் | அளவு
உலகில் வாழ இறைவன் நமக்கு அருட்கொடைகளை வழங்கியுள்ளான். அதை சிலர் தவறான முறையில் பயன்படுத்தி அதர்ம வழியில் சம்பாதிக்கின்றனர்.
அதை மறைப்பதற்காக ஏழைகளுக்கு உணவளிப்பது, அனாதை, முதியோர் இல்லத்திற்கு உதவுவது என செலவு செய்கின்றனர். இதன் மூலம் பாவங்களில் இருந்து விடுபடலாம் என தப்புக்கணக்கு போடுகின்றனர். தர்மம் செய்வது நன்மையைத் தரும் என்றாலும், ஹராமான வழியில் (தடை செய்யப்பட்ட வழியில்) தேடிய பணத்தால் தர்மம் செய்வது கூடாது. மாறாக பாவத்தைச் சுமக்க நேரிடும்.
தடை செய்யப்பட்ட வழியில் தேடிய பணத்தில் வந்த உணவு ஒருவரின் வயிற்றை அடைந்தால், அவனது தொழுகை ஏற்கப்படாது.
