ADDED : ஜூலை 02, 2026 10:42 AM
அ நிறம் | அளவு
அறிஞரான இமாம் ஷாபிஈயின் சிறு வயதில் நடந்த சம்பவம் இது.
சிறுவயதிலேயே தந்தையை இழந்தார். தையல் வேலை செய்து இவரை வளர்த்தார் தாயார். ஒருநாள் நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தான் சிறுவன் ஷாபிஈ. எதிர்பாராமல் அவனுடைய சட்டை, மரக்கிளையில் மாட்டிக் கொள்ள கிழிந்தது. தன்னிடம் இருந்த நல்ல சட்டை கிழிந்ததே என கவலைப்பட்டான். தாயாருக்கு தெரிந்தால் திட்டுவாரே என பயந்தான். ஆனால் அவரோ, 'கவலைப்படாதே.
சட்டையை கொடு; தைக்கிறேன்'' என ஊசியால் நேர்த்தியாக தைத்தார்.
''மகனே... நம்மிடம் பணம் இல்லாமல் இருக்கலாம். ஆனால் அணியும் ஆடையில் அழுக்கோ, கிழிசலோ இருக்கக் கூடாது. ஒழுக்கம், மனத்துாய்மையை கண்ணாக காத்துக் கொள்'' என்றார்.
