ADDED : ஜூலை 09, 2026 10:23 AM
அ நிறம் | அளவு
நபிகள் நாயகத்தை சந்தித்த ஒருவர், ''தங்களின் மீது மரியாதை வைத்திருக்கிறேன். உங்களை நேசிக்கிறேன்'' என்றார்.
''அப்படியானால் பொறுமையுடன் இருக்க கற்றுக் கொள்ளுங்கள்'' என்றார்.
'ஏன் இப்படி சொல்கிறார்' என அவருக்கு காரணம் புரியவில்லை. இதற்கான விளக்கம் இதோ... ஒருவரை நேசித்தால் அவரிடம் உள்ள நல்ல பண்பை நாம் பின்பற்ற வேண்டும். வாழ்வில் பெரும் போராட்டம், துன்பங்களைச் சந்தித்த நாயகம், தன்னை நேசிப்பவருக்கு துன்பத்தை தாங்கும் பக்குவம் இருக்க வேண்டும் என நினைத்தார். அதாவது அவர் பொறுமையை கடைபிடிக்க வேண்டும். இதை எப்படி பெறுவது?
'இறைவா... தினமும் ஐந்து வேளை தொழுகிறேன். உன்னையே எப்போதும் சிந்திக்கிறேன். எத்தனை துன்பம் வந்தாலும் உன் அருளால், என்னை ஒன்றும் செய்ய முடியாது' என பிரார்த்தனை செய்ய வேண்டும்.
