ADDED : ஜூலை 09, 2026 10:25 AM

அ நிறம் | அளவு
தேர்வில் பெயிலான ஜமால் வருத்தமுடன் மரத்தடியில் அமர்ந்திருந்தான். அப்போது அவன் எறும்பு ஊர்ந்து செல்வதை பார்த்தான். அது தன் உடல் எடையை விடப் பெரிய தானியம் ஒன்றை எடுத்துக்கொண்டு சுவரில் ஏற முயன்றது. பாதியிலேயே அது கீழே விழுந்தது. மீண்டும் முயற்சித்தது ஆனால் கீழே விழுந்தது. இப்படி ஐந்து முறை விழுந்தும் எறும்பு சோர்வு அடையவில்லை.
ஆறாவது முறை வெற்றிகரமாக அந்த தானியத்தைச் சுவரின் உச்சிக்குக் கொண்டு சென்றது. இதைப் பார்த்த ஜமால் வருத்தம் மறைந்தது. நம்பிக்கையுடன் புதிய பாதையில் புறப்பட்டான்.
