ADDED : ஜூலை 16, 2026 11:02 AM
அ நிறம் | அளவு
தன் வகுப்பு டீச்சரை பார்க்க ஓடி வந்தான் அகமத். ''சார். இன்னைக்கு நம்ம இங்கிலீஷ் டீச்சரைப் பற்றி ஒரு விஷயம் கேள்விப்பட்டேன். அதை உங்களிடம் சொல்லத் தான் வந்தேன்'' என்றான்.
அதற்கு அவரோ, ''நான் கேட்பதற்கு முதலில் பதில் சொல். நேரத்தை வீணாக்காதே'' என்றார்.
''கேளுங்கள் சார்''
''நீ சொல்ல வந்த விஷயம் உண்மை என உறுதியாக தெரியுமா''
''இல்லை. நேற்று பஸ்சில் போகும் போது கேள்விப்பட்டேன்''
''சரி. நீ சொல்லப் போவது இங்கிலீஷ் டீச்சரை பற்றிய நல்ல விஷயமா''
''இல்லை''
''அதை என்னிடம் சொல்வதால், எனக்கு ஏதாவது பலன் உண்டா''
''யாருக்கும் நன்மை இல்லை''
சிரித்தபடி, ''வகுப்புக்கு போ. அந்த விஷயத்தை இப்போதே மறந்திடு'' என முதுகில் தட்டிக் கொடுத்தார்.
பார்த்தீர்களா... நாம் இனி இந்த கேள்விகளை கேட்ட பிறகு பேசினால் நேரம் வீணாகாது.
