தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இஸ்லாம்/கதைகள்/நிம்மதியாக துாங்கு

நிம்மதியாக துாங்கு

நிம்மதியாக துாங்கு


ADDED : ஜூலை 16, 2026 11:04 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 16, 2026 11:04 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

 எந்நேரமும் விளையாடி மகிழ்பவள் சிறுமி பரீதா பானு. ஆனால் இரவு வந்தால் பயத்துடன் அழுவாள். துாங்கும் போது கெட்ட கனவும் வரும். ஒருநாள் அவளுடைய பாட்டியிடம் அடிக்கடி கனவு வருவது பற்றிக் கூறினாள்.

அவளின் கையைப் பிடித்தபடி, 'பயப்படாதே. நம்மை படைத்த இறைவன் நம்மை பாதுகாப்பான். அத்துடன் நான் சொல்வதை செய். நிம்மதியாக துாக்கம் வரும்' என்றார் பாட்டி.

‘‘அவசியம் செய்றேன் பாட்டி’’

‘‘படுக்கையைச் சுத்தமாக உதறி விட்டு, வலது பக்கமாகச் சாய்ந்து படு. பிறகு ‘அல்லாஹும்ம பிஸ்மிக அமூத்து வ அஹ்யா’ என்ற இந்த துஆவை ஓது. இறைவா... உன் பெயராலேயே நான் துாங்குகிறேன். உன் பெயராலேயே நான் உயிர் பெற்று எழுகிறேன் என்பதே இதன் பொருள். இந்த துஆவை ஓதினால் மலக்கை (வானவர்) உனக்கு காவலாக நிற்பார். கெட்ட கனவும், பயமும் உன்னை நெருங்காது’’ என்றார்.

அன்றிரவு பாட்டி சொல்லியபடி செய்த பரீதா நிம்மதியாக துாங்கினாள். 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us