ADDED : ஜூலை 16, 2026 11:12 AM
புகாரி என்ற சுட்டிப் பையனுக்கு திடீரென பார்வை பறி போனது.
அவனுடைய தாயார் இடைவிடாமல், ''என் மகனுக்கு மீண்டும் பார்வை கிடைக்க வேண்டும். அவன் கல்வி கற்க வேண்டும்'' என தினமும் துஆ செய்தார். ஒருநாள் அவருடைய பிரார்த்தனை பலித்தது. ஆம். புகாரிக்கு மீண்டும் பார்வை கிடைத்தது. அன்று முதல் படிப்பில் கவனம் செலுத்தினான். கல்வி கற்ற பிறகு ஆன்மிகப்பணியில் ஈடுபட்டார். நாயகம் சொன்ன அறிவுரைகளை (ஹதீஸ்) தொகுக்கும் பணியில் ஈடுபட்டார்.
அதற்காக நாயகம் சொன்ன அறிவுரைகளை நினைவில் வைத்திருந்த பெரியவர்களை தேடிச் சென்று நுாலாக தொகுத்தார். இதற்காக ஒட்டகத்தின் மீது நீண்ட துாரம் பயணித்தார். கொளுத்தும் வெயில், சுடும் மணல், பசி, தாகம் என எதையும் பொருட்படுத்தவில்லை. ஒரு ஹதீஸைக் கேட்பதற்காக மாதக்கணக்கில் கூட பயணம் செய்ய வேண்டியிருந்தது. இப்படி ஹதீஸ்களை ஆராய்ந்து, அவற்றை தொகுத்து நுாலாக்கினார். அதுவே 'ஸஹீஹ் அல்-புகாரி' புத்தகம். லட்சியத்தை அடைவதில் உறுதியாக இருப்பவரே வெற்றியாளர்.
