ADDED : ஜூலை 16, 2026 11:13 AM

அ நிறம் | அளவு
ஒருமுறை மெதீனாவில் இருந்து கலீபா(மன்னர்) உமர் மக்களின் நிலையை அறிவதற்காக சிரியாவுக்குச் சென்றார். வழியில் அங்கு தொற்று நோய் பரவி இருப்பதாகச் செய்தி கிடைத்தது.
மீண்டும் மெதீனாவுக்கு திரும்பலாமா... இல்லை. பயணத்தை தொடரலாமா... என தளபதிகளிடம் கேட்டார்.
'இறைவன் மீது பாரத்தை வைத்து விட்டு பயணத்தைத் தொடர்வோம்' என்றனர் சிலர். மற்றவர்களோ, 'வேண்டாம். நாடு திரும்புவோம்' என்றனர். குழப்பம் அடைந்த உமர், தன் தோழரான அப்துர் ரஹ்மான் இப்னுவிடம் ஆலோசனை கேட்டார்.
''நோய் பரவியிருப்பதாக அறிந்ததால் அங்கு போக வேண்டாம். உள்ளூரில் இருக்கும் போது நோய் பரவினால் அந்த ஊரை விட்டும் வெளியேறக் கூடாது என நபிகள் நாயகம் சொல்ல கேட்டிருக்கிறேன்'' என்றார். உடனே உமர் பயணத்தை கைவிட்டார்.
