ADDED : ஜூலை 23, 2026 09:06 AM
ஒருநாள் மதியம் நசீர் நண்பர்களுடன் விளையாடி விட்டு வீட்டிற்குள் வந்தான். தாகம் எடுக்கவே, கை, கால்கள் கூட கழுவாமல் கிச்சனுக்குள் நுழைந்தான். தண்ணீர் செம்பை தேடினான். இதை கவனித்த அம்மா, ''எத்தனை தடவ சொல்லி இருக்கேன். கை, கால் கழுவாம அழுக்கு கையோட தண்ணீர் குடிக்காதேன்னு'' என அதட்டினாள்.
''தாகம் எடுக்குதம்மா...''
''முதல்ல குளிச்சுட்டு வா. சட்டையெல்லாம் எப்படி மண்ணா இருக்குன்னு'' என்றாள் கோபத்துடன்.
அவனும் ஒருவழியாக குளித்து விட்டு வந்தான். அவனுக்காக கண்ணாடி டம்ளரில் ரோஸ்மில்க் தயாராக வைத்திருந்தாள் அம்மா.
அதைப் பார்த்த நசீர், ''எனக்கு பிடிச்ச ரோஸ்மில்க். நன்றிம்மா'' என மடமடவென குடித்தான். எப்பவும் சொல்றத தான் இப்பவும் சொல்றேன். சுத்தமா இருந்தால்தான் இறைவனுக்கு உன்னை பிடிக்கும். அப்புறம் இப்படி மடமடக்குன்னு ரோஸ்மில்க்கை குடிக்கக் கூடாது. நிதானமாக ரசித்து குடிக்கணும். சரியா'' என்றாள்.
