ADDED : ஜூலை 30, 2026 07:50 AM
அ நிறம் | அளவு
எகிப்து நாட்டைச் சேர்ந்த அறிஞர் லுக்மான் அடிமையாக வாழ்ந்தார். ஒருநாள் அவருடைய எஜமானர், ''ஆட்டிறைச்சியில் நல்ல சதைத் துண்டாக பார்த்து கொண்டு வா'' என்றார். லுக்மானும் நாக்கு, இதய பகுதியை அறுத்து கொண்டு வந்தார். எஜமானர் அதை சாப்பிடவில்லை. சிறிது நேரத்திற்கு பின் இறைச்சியில் மோசமான சதைத் துண்டுகளைக் கொண்டு வருமாறு கூறினார். அப்போது அவர் முன்பு கொடுத்ததையே எஜமானரிடம் நீட்டினார்.
இதைப் பார்த்த எஜமானர், ''நல்லதைக் கேட்ட போதும், மோசமானதைக் கேட்ட போதும் இதையே தருகிறாயே ஏன்'' எனக் கேட்டார். அதற்கு,''நல்லதை பேசும் நாக்கும், நல்லதை நினைக்கும் இதயமும் கொண்டவரே சிறந்தவர்'' என்றார் அடிமையான லுக்மான். ஒரு நிமிடத்தில் வாழ்க்கையை புரிய வைத்து விட்டாரே என திகைத்தார் எஜமானர்.
