ADDED : ஜூலை 30, 2026 07:52 AM
அ நிறம் | அளவு
அபூபக்கர் நேர்மையான ஆட்சியாளர். தான் ஆட்சிப் பொறுப்பு ஏற்ற மறுநாளே தான் முன்பு செய்த துணி வியாபாரத்தை கவனிக்க புறப்பட்டார்.
''அபூபக்கரே! நீங்கள் வழக்கமான பணியில் ஈடுபட்டால் ஆட்சியை கவனிப்பது யார்?'' எனக் கேட்டார் உமர்.
''ஆட்சியில் இருந்தாலும் என் குடும்பத்தை கவனிக்காமல் இருக்க முடியுமா? துணி வியாபாரம் மூலம் கிடைப்பதை வைத்து குடும்பத்தை காப்பாற்றுவேன்'' என்றார் அபூபக்கர்.
தோழர்களுடன் ஆலோசித்த உமர், அரசு கஜானாவில் இருந்து மாதம் தோறும் குடும்பச் செலவுக்கு பணம் தர முடிவு செய்தார். ஆனால் அபூபக்கர் தன் இறுதிக் காலத்தில் குடும்பத்திற்காக வாங்கிய பணத்தை அரசிடமே ஒப்படைத்தார்.
நேர்மைதான் அவரின் சொத்து.
