ADDED : ஜூலை 30, 2026 07:59 AM

அ நிறம் | அளவு
ஒருமுறை அரண்மனையில் தங்கியிருந்தார் முல்லா. மன்னருடன் சேர்ந்தே சாப்பிட்டு வந்தார். ஒருநாள் உருளைக்கிழங்கு பரிமாறப்பட்டது. மன்னருக்கு பசி என்பதால் உருளைக்கிழங்கை சாப்பிட்டதும். 'ருசியோ ருசி' என மகிழ்ந்த மன்னர் உருளைக்கிழங்கே ருசியான உணவு என்றார். முல்லாவும், ''நீங்கள் சொல்வது உண்மையே'' என்றார்.
உடனே சமையல்காரரை அழைத்து,''இன்று முதல் உருளைக்கிழங்கு ஏதாவது ஒரு வகையில் இடம் பெற வேண்டும்'' என்றார் மன்னர். இரண்டு வாரம் கடந்ததும் உருளைக்கிழங்கு தொடர்ந்து சாப்பிட்டதால் சலிப்பு ஏற்பட்டது. முல்லாவிடம், ''மோசமான உணவு உருளைக்கிழங்கு தான்'' என்றார் மன்னர்.
''எனக்கும் அப்படித்தான். இனிப்பு தின்பண்டமாக இருந்தாலும் தினமும் சாப்பிட்டால் விரைவில் சலித்து விடும். எதையும் அளவாக சாப்பிடுவது நல்லது'' என்றார் முல்லா.
