ADDED : ஆக 03, 2026 01:31 PM
அ நிறம் | அளவு
உலக வாழ்க்கை நிலை இல்லாதது. இந்த உண்மையை எடுத்துக்காட்டு மூலம் விளக்கினார் நபிகள் நாயகம். இரண்டு கற்களை எடுத்து, ஒன்றை அருகிலும், மற்றொன்றை சற்று தொலைவிலும் எறிந்தார். பின்னர் தோழர்களிடம், ''இந்த கற்கள் சொல்லும் பாடம் என்ன தெரியுமா'' எனக் கேட்டார்.
''இறைத்துாதரான உமக்கு மட்டுமே தெரியும்'' என்றனர்.
''தொலைவில் இருக்கும் கல் மனதில் எழும் ஆசை, எதிர்பார்ப்புகளைக் குறிக்கும். அருகிலுள்ள கல் வாழ்நாளைக் குறிக்கும். அதாவது எதிர்பார்ப்பை மனிதன் அடையும் முன்பே வாழ்நாள் முடிந்து விடும்'' என்றார்.
என்ன அழகான உவமை! பேராசைகளால் நேர்வழியை விட்டு திசை மாறிச் செல்பவர்கள் இந்த உண்மையை உணர்வது நல்லது.
