ADDED : ஆக 03, 2026 01:32 PM

அ நிறம் | அளவு
ஆசிரியர் ஜாபர் கண்ணாடி டம்ளரைக் காட்டியபடி ஒளி ஊடுருவல் பற்றி விளக்கிக் கொண்டிருந்தார். அப்போது மாணவன்
அன்வர் அதை கவனிக்காமல் எதையோ யோசித்தபடி இருந்தான்.
''அன்வர்... என்னாச்சு உனக்கு. பாடத்தை கவனிக்காம என்ன யோசிக்கிற'' எனக் கேட்டார்.
''இல்ல சார். சயின்ஸ்ல மார்க் குறைஞ்சு போச்சு... அதான்'' என இழுத்தான்.
''என் கையில் உள்ள கண்ணாடி டம்ளர் லேசானது. ஆனாலும் தொடர்ந்து பிடித்திருந்தால் கை வலிக்கும். அதுவே மணிக்கணக்காகி விட்டால் கை மரத்துப் போயிடும். அது நம் மனசுக்கும் பொருந்தும். முடிந்து போன விஷயத்தையே நினைச்சு கவலைப்படாதே. இப்போ நடக்கறதப் பாரு. பாடத்தை கவனி. மனசை லேசாக வைச்சுக்கோ. அது தான் புத்திசாலித்தனம்'' என்றார் ஆசிரியர்.
