ADDED : ஆக 03, 2026 01:36 PM
அ நிறம் | அளவு
சுட்டிப் பெண் ஆயிஷாவுக்கு அன்று ஸ்கூல் லீவு. வீட்டு மாடி தோட்டத்தை சுற்றி சுற்றி வந்தாள். அன்று புதுசா ரோஜாப்பூ ஒன்று பூத்திருந்தது. அதைப் பார்த்ததும் ஆசையாக தண்ணீர் ஊற்றினாள். பின் கீழே இறங்கி வந்ததும் அவளது அப்பா தொழுகைக்கு கிளம்பி செல்வதை பார்த்தாள்.
''அப்பா... நாம் ஏன் தினமும் ஐந்து முறை தொழுகை செய்ய வேண்டும்'' எனக் கேட்டாள்.
அதற்கு அவர், ''பாப்பா... இப்போ எதற்கு நீ மாடிக்கு போனாய்'' எனக் கேட்டார்.
''செடிக்கு தண்ணீர் ஊற்ற''
''ஒரு நாளைக்கு எத்தனை தடவை இப்படி செய்வாய்''
''காலை, மாலையில் தண்ணீர் ஊற்றுவேன்''
''ஏன்''
''அப்ப தானே நன்றாக வளரும். பார்க்கவும் அழகாக இருக்கும்''
''சரியாக சொன்னாய். அது மாதிரி தான். தொழுகை செய்பவரின் தவறை இறைவன் மன்னிப்பான். சரி... தொழுகைக்கு நேரமாச்சு'' எனப் புறப்பட்டார் அப்பா.
