ADDED : ஆக 03, 2026 01:37 PM
அ நிறம் | அளவு
அதிகாரியாக பணியாற்றிய ஒருவர் முதன் முதலாக லஞ்சம் வாங்கினார். அன்றிரவு கீழ்க்கண்டவாறு பிரார்த்தனை செய்தார்.
'நான் பெரிதாக ஒன்றும் தப்பு செய்யவில்லை. ஏதோ என்னுடைய கையெழுத்துக்காக மூவாயிரம் கேட்டேன். ஆனால் ஆயிரம் மட்டுமே இருப்பதாகச் சொன்னார் அந்த நபர். நானும் வாங்கிக் கொண்டு கையெழுத்திட்டேன். அதுவும் எனக்காக லஞ்சம் வாங்கவில்லை. என் மனைவியின் மருத்துவ செலவுக்காக வாங்கினேன். இருந்தாலும் அந்த நபருக்கு வேறு வகையில் பணம் திரும்ப கிடைக்க வேண்டும்' என்றார்.
பார்த்தீர்களா... தப்பு செய்து விட்டு அதற்கு நியாயம் கற்பித்தால் என்ன அர்த்தம்?
மனசாட்சியை மதிப்பவர் தவறான செயலில் ஈடுபட முடியாது.
