ADDED : ஆக 13, 2026 08:35 AM

அ நிறம் | அளவு
தோழரான ஹன்ழலாவுக்கு திருமணம் நடந்தது. மறுநாளே மார்க்கத்திற்காக போரில் ஈடுபட அழைப்பு வந்தது. அதில் அவர் உயிர் துறந்து ஷஹீத் (தியாகி) ஆனார். மரணத்திற்கு பின் நடத்தப்படும் தொழுகையில் பங்கேற்ற நபிகள் நாயகம் தானாக சிரித்தார். அதை பார்த்த தோழர்கள் காரணத்தைக் கேட்டனர்.
''திருமணத்திற்கு மறுநாளே போரில் ஈடுபட்டு உயிர் துறந்தார். இதனால் மேல் உலகத்தில் உயர்ந்த பதவியை பெற்று விட்டார். அவரை வானவர்கள் குளிப்பாட்டிக் கொண்டிருக்கின்றனர்'' என்றார். இதனால் இவர் 'வானவர்களால் நீராட்டப்பட்ட ஹன்ழலா' எனப் பெயர் பெற்றார்.
