தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இஸ்லாம்/கதைகள்/மனதை மாற்றியவர்

மனதை மாற்றியவர்

மனதை மாற்றியவர்


ADDED : ஆக 20, 2026 11:46 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 20, 2026 11:46 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நபிகள் நாயகத்தின் அறிவுரையைக் கேட்ட மக்கள் மனம் திருந்தினர். நல்லவர்களாக வாழத் தொடங்கினர். சிலர் மகான்களாகவும் மாறினர்.

எங்கும் அமைதி நிலவியது. இப்படி மனிதர்களை வாழ வைப்பதற்காக, ஒரு லட்சத்து இருபத்து நான்கு ஆயிரம் நபிமார்களை இறைவன் உலகிற்கு அனுப்பினான்.

இவர்களில் கடைசியாக வந்தவரே நபிகள் நாயகம். இவர் 63 வயது வரை வாழ்ந்தாலும், மக்களுக்கு சேவை செய்தது 23 ஆண்டுகள் தான். அதிலும் தன்னுடைய கடைசி ஹஜ் யாத்திரையின் போது பலருடைய மனதை மாற்றி நல்வழிப்படுத்தினார். உலகம் நலம் பெற அவர் வழங்கிய அறிவுரையை இங்கு காண்போம்.

'ஏழைக்கு உணவளியுங்கள். பெற்றோரை நேசியுங்கள். உறவினருடன் ஒற்றுமையாக வாழுங்கள். அண்டை வீட்டாருக்கு இடையூறு செய்யாதீர்கள். சக மனிதர்களை மதியுங்கள். விதவை, ஆதரவற்றோருக்கு உதவுங்கள்.பிரச்னைகளை பேசி தீருங்கள். நன்மையை தேடிச் செல்லுங்கள். தீமையை விட்டு விலகுங்கள்.

சகோதரத்துவத்தோடு பழகுங்கள், பெரியோரை மதிப்புடன் நடத்துங்கள். சிறியவர் மீது அன்பு காட்டுங்கள். இரக்கமுடன் செயல்படுங்கள். எதை நீங்கள் உங்களுக்கு விரும்புகிறீர்களோ அதையே பிறருக்கும் விரும்புங்கள்' என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us