ADDED : ஆக 27, 2026 08:03 AM
அ நிறம் | அளவு
தாகம் என சொல்பவருக்கு தண்ணீர் கொடுப்பது அவசியம். கீழ்க்கண்ட நிகழ்ச்சி மூலம் இந்த உண்மையை அறியலாம்.
இறப்புக்கு பின்னர் மறுமை நாளில் இறைவன் முன் நிறுத்தப்பட்டார் ஒரு மனிதர். அவரிடம், ''வாழும் நாளில் ஒருமுறை உன்னிடம் குடிக்க தண்ணீர் கேட்டேன். நீ தரவில்லையே'' எனக் கேட்டான் இறைவன்.
''உலகில் உள்ள அனைத்தும் உமக்கே சொந்தம். அப்படி இருக்கும் போது நான் எப்படி தண்ணீர் தராமல் இருக்க முடியும்'' என்றார் அந்த மனிதர்.
''அடியவர் ஒருவரின் பெயரைச் சொல்லி, அவர் தண்ணீர் கேட்ட போது நீ தரவில்லையே'' என்றான்.
அப்போது தான் அந்த மனிதருக்கு நடந்த சம்பவம் நினைவுக்கு வந்தது.
''தவித்த வாய்க்கு தண்ணீர் கொடுக்காவிட்டால் பாவம் சேரும்'' என்றான் இறைவன்.
இனியாவது தாகம் என கேட்பவருக்கு தண்ணீர் கொடுங்கள்.
