ADDED : ஆக 27, 2026 08:11 AM

சிறுவன் பஷீர் சுட்டிப் பையன். ஒரு பொருளின் மீது ஆசைப்பட்டால் அதை வாங்க வேண்டும் என நினைப்பான். ஒருநாள் அவனுடைய நண்பன் ஆஷிக் அலியின் பிறந்த நாள். அன்று அவன் கண்ணைக் கவரும் விதத்தில் சட்டை, பேண்ட் அணிந்திருந்தான். அவனைப் பார்த்ததும் இந்த டிரஸ் என்னிடம் இல்லையே என ஏங்கினான் பஷீர்.
''அம்மா... எனக்கும் புது டிரஸ் வாங்கித் தா'' என்றான்.
''பொறுமையா இரு... அடுத்த மாசம் வாங்கலாம்'' என்றாள்.
''ம்... முடியாது. இப்பவே கடன் வாங்கி டிரஸ் வாங்கலாம்'' என்றான்.
வாசலில் உள்ள பூச்செடியை காட்டினாள் அம்மா.
''இந்தச் செடியைப் பார். இது எப்போதாவது பக்கத்துச் செடியிடம் கையேந்துகிறதா? இல்லை தானே. இறைவன் தரும் மழை, சூரிய ஒளியை நம்பி சுயமாக இது வாழ்கிறதே... அதுபோல நாமும் பிறரிடம் கையேந்தக் கூடாது. சொந்தக்காலில் நிற்க வேண்டும். அடுத்த மாதம் வாங்கலாம்'' என சமாதானம் செய்தாள் அம்மா.
