ADDED : செப் 03, 2026 11:23 AM

அ நிறம் | அளவு
நபிகள் நாயகத்திற்கும், குரேஷி இன மக்களுக்கும் இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. இது முஸ்லிம்களுக்கு எதிரானது என தோழர் உமர் கோபப்பட்டார்.
''இது என்ன கோழைத்தனமான ஒப்பந்தம். குரேஷிகள் நமக்கு எதிரி ஆயிற்றே'' என நாயகத்திடம் கேட்டார்.
''ஆம். எதிரிகள்தான். இருந்தாலும் ஒப்பந்தத்தை நான் மீறாமல் இருப்பேன்'' என்றார்.
அப்போது இறைவன் ஒரு வசனத்தை அருளினான்.
'உமக்கு வெற்றியளிப்பேன்' என்றான். இந்த உடன்படிக்கைக்கு பின்னரே மெக்காவை வெற்றி கொண்டார் நாயகம். கோபப்பட்டது தவறு என்பதை உணர்ந்த உமர் மன்னிப்பு கேட்டார்.
நாம் விரும்பியபடியே நடக்க வேண்டும் என எதிர்பார்க்கிறோம். மாறாக நடந்தால் கோபப்படுகிறோம். அதை தவிர்ப்பதே அமைதிக்கான வழி.
