ADDED : செப் 10, 2026 07:42 AM
இஸ்லாத்தின் இரண்டாவது கலீபா (ஆட்சியாளர்) ஹஸரத் உமரின் ஆட்சிக்காலம் பொற்காலமாக இருந்தது. அவர் அடிக்கடி மாறுவேடத்தில் நகர்வலம் வந்து, மக்களின் குறைகளை அறிவது வழக்கம். ஒருநாள் ஒரு வீட்டில் தாயும், மகளும் பேசுவதை கேட்டார். அவர்கள் பால் வியாபாரம் செய்பவர்களாக இருந்தனர்.
''இன்று பால் பற்றாக்குறையாக இருக்கு. எனவே பாலில் தண்ணீர் கலந்து விற்பனை செய்வோம். தண்ணீரைக் கொண்டு வா'' என மகளிடம் சொன்னாள் தாய்.
அதற்கு அவள், ''இது பாவச்செயல் அம்மா. இதை நான் செய்ய மாட்டேன்'' என மறுத்தாள்.''நீ ஏன் பயப்படுகிறாய். கலீபா தான் இங்கு இல்லையே''
''அவர் இல்லை என்றால் என்ன? இறைவன் நம்மை பார்க்கிறான் அல்லவா... மறுமையில் பதில் சொல்ல வேண்டியிருக்குமே'' என எச்சரித்தாள்.
வாசலில் நின்றபடி இதை கேட்ட கலீபா அவளை பாராட்டினாள். அதுமட்டுமல்ல. நேர்மையான அப்பெண்ணை தனது மகன் ஆஸிமுக்கு திருமணம் செய்து வைத்தார்.
இவர்களின் வழித்தோன்றலே இரண்டாவது உமர் என போற்றும் உமர் இப்னு அப்துல் அஸீஸ்.
