ADDED : செப் 10, 2026 07:48 AM
அ நிறம் | அளவு
குடும்பத்தினர், அண்டை வீட்டார், உறவினருடன் பிரச்னை வருவது இயல்பு. அதனால் ஒருவரை ஒருவர் பார்க்காவோ, பேசவோ விரும்ப மாட்டார்கள். இது தவறு. பிரச்னை வந்தால் உடனடியாக பேசி தீர்வு காணுங்கள். ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுங்கள். ஆனால் சிலர் என்ன செய்வார்கள் தெரியுமா...'எனக்கு பிடிக்காதவன் ஒழிந்து போக வேண்டும்' என சாபமிடுவர்.
ஒருவேளை அது நடந்தால் எதிரியைக் கண்டு சிரிக்கவும் செய்வர். பாவிகளான இவர்கள் மறுமை நாளில் கொடிய தண்டனைக்கு ஆளாவர். 'சகோதரனின் துன்பத்தைக் கண்டு மகிழ்ச்சி அடையாதே. இறைவன் கருணையால் அவனுடைய துன்பத்தை போக்குவதோடு உன்னை துன்பத்தில் ஆழ்த்துவான்'
