ADDED : செப் 10, 2026 07:51 AM
அ நிறம் | அளவு
கலீபா (ஆட்சியாளர்) ஹாருன் அல் ரசீத் தன் ஆட்சியில் அழகான மாளிகையை கட்டினார். அதற்காக பெரும் பணம் செலவழிந்தது. அதைக் கண்ட அனைவரும் ஆச்சரியப்பட்டு கலீபாவை பாராட்டினர்.
ஒருநாள் கலீபாவின் தம்பி ஹஸரத் பஹ்ருல் மாளிகையை பார்வையிட வந்தார். அதன் வெளிச்சுவரில் ஒரு வாசகத்தை எழுதி விட்டுச் சென்றார்.மறுநாள் காலையில் அங்கு வந்த கலீபா வாசகத்தை படித்தார். அதிலுள்ள ஒவ்வொரு சொல்லும் அவருடைய நெஞ்சில் ஈட்டியாக குத்தியது.
'ஹாருன் நீ விரயம் செய்தது உன் சொந்தப் பணமானால் இறைவன் ஆடம்பரத்தை விரும்ப மாட்டான். ஒருவேளை செலவு செய்தது பொதுச் சொத்தாக இருந்தால் அக்கிரமம் செய்தவன் ஆவாய். இதற்காக மறுமையில் நீ பதில் சொல்ல வேண்டியிருக்கும்' என்பதே அவ்வாசகம்.
உணவு, உடை, இருப்பிடம் ஆகியவற்றில் எளிமையை பின்பற்றுங்கள்.
