ADDED : செப் 10, 2026 07:52 AM

அ நிறம் | அளவு
ஒருமுறை நபிகள் நாயகத்தை சந்திக்க வந்தார் தோழரான உஸ்மான் பின் அபில்ஆஸ்.
''துாதரே... நான் தொழுகையில் இருந்த போது ஷைத்தான் தடையை உண்டாக்குகிறான். மனதில் குழப்பத்தை ஏற்படுத்துகிறான்'' என்றார்.
அதற்கு நாயகம், ''அவன்தான் 'கின்ஸப்' என்ற ஷைத்தான். அவனை நீங்கள் உணர்ந்தால் இறைவனிடம் வேண்டி, உங்கள் இடது பக்கத்தில் மூன்று முறை துப்பி விடுங்கள்'' என்றார்.
அவரும் தொழுகை நேரத்தில் அப்படியே செய்ய ைஷத்தான் விலகுவதைக் கண்டார்.இப்படி தொழுகை, குர்ஆன் ஓதும் நேரத்தில் தீய எண்ணங்களை ஷைத்தான் ஏற்படுத்தலாம். அப்போது உஷாராக இருந்து அவனை விரட்டுங்கள்.
