தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இஸ்லாம்/கதைகள்/நல்லதை மறக்காதே

நல்லதை மறக்காதே

நல்லதை மறக்காதே


ADDED : செப் 18, 2026 08:14 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 18, 2026 08:14 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அகமதும், அமீரும் நண்பர்கள். ஒருநாள் இருவரும் நடந்து செல்லும் வழியில் ஒரு விஷயத்தை பற்றி காரசாரமாக விவாதித்தனர்.

ஒரு கட்டத்தில் அகமது 'நான் சொல்வதே சரி' என அடம் பிடித்தான். அமீரும் அதை ஏற்றுக் கொண்டு அங்குள்ள மணலில், 'என் நண்பன் என்னுடன் சண்டையிட்டான்' என எழுதினான். அகமதுக்கு ஒன்றும் புரியவில்லை. ஆனாலும் இது பற்றி அவனிடம் கேட்கவில்லை.

இறுக்கமான மனதுடன் இருவரும் நடந்தனர். திடீரென அந்த வழியாக வந்த திருடன் ஒருவன் அமீரிடம் வழிப்பறி செய்ய முயன்றான். திருடனுடன் சண்டையிட்டு அமீரைக் காப்பாற்றினான். 'நண்பனால் காப்பாற்றப்பட்டேன்' என அங்கிருந்த பாறையில் எழுதி வைத்தான்.

இதைப் பார்த்த அகமது, 'ஏன் இப்படி எழுதுகிறாய்' எனக் கேட்டான்.

'ஒருவர் செய்த தீமையை மணலில் எழுதினால் அது சற்று நேரத்தில் காற்றில் மறைந்து விடும். ஆனால் அவர் செய்த நன்மையை கல்லில் எழுதினால் மனதில் பதியும்'' என்றான் அமீர். பிறர் செய்த நல்லதை மறக்கக்கூடாது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us