ADDED : அக் 15, 2026 01:57 PM
அ நிறம் | அளவு
நெடுஞ்சாலையில் வேகமாக சென்ற கார் திடீரென ஓரிடத்தில் நின்றது.
காரை ஓட்டிய நிஷார் பக்கத்து சீட்டில் துாங்கிய நண்பனை எழுப்பி, 'டேய்... நீ துாங்குறதை பார்த்தால் எனக்கும் துாக்கம் வருது' என்றான். கண் விழித்த நண்பனும் துாங்குவதை தவிர்க்க பாட்டு கேட்கத் தொடங்கினான்.
இப்படித் தான் உங்களைச் சுற்றி வீடு, பள்ளி, அலுவலகம் என எங்கும் பலரும் இருப்பார்கள். அவர்களின் எண்ணம், குணம், பேச்சு, செயல் நம்மையும் தொற்றி விடும்.
எனவே நேர்மறை எண்ணம் கொண்டவர்களிடம் பழகுங்கள். ஒருவேளை எதிர்மறை சிந்தனை உள்ளவராக இருந்தால் அவர்களுக்கு நல்லதை சொல்லுங்கள். வாழ்க்கைப் பயணம் இனிதாகும்.
