ADDED : அக் 22, 2026 12:27 PM

அ நிறம் | அளவு
நபிகள் நாயகம் ஒருநாள் மஸ்ஜிதுன் நபவியில் (பள்ளிவாசல்) தோழர்களுக்கு உபதேசம் செய்தார். அப்போது அங்கு கிழிந்த, அழுக்கு ஆடையுடன் ஒருவர் வந்தார். கூச்சப்பட்டு ஓரமாக நின்றிருந்தார். அதை கவனித்த நாயகம், ''தோழரே... உட்காராமல் ஏன் தனியாக நிற்கிறீர்கள்'' எனக் கேட்டார்.
''நான் ஏழை. தங்களுடன் சேர்ந்து உட்காருவதற்கு எனக்கு தகுதி இல்லை'' என்றார் தயக்கத்துடன். அப்போது எழுந்து வந்து ஏழையை அணைத்தபடி, ''தோழரே... இறைவன் முன்னிலையில் அனைவரும் சமம். நானும் ஒரு ஏழைதான். தினமும் உலர்ந்த ரொட்டி, பேரீச்சம்பழத்தையும் சாப்பிடும் ஏழைத்தாயின் வயிற்றில் பிறந்தவன்'' என்றார். அன்புடன் தன் அருகிலேயே அவரை உட்கார வைத்தார்.
