ADDED : அக் 22, 2026 12:34 PM
அ நிறம் | அளவு
திருமணமாகி பல ஆண்டுகள் ஆகி விட்டது. ஆனால் குழந்தை இல்லை. இந்த சூழலில் ஒரு பெண் அடையும் வேதனையை விவரிக்க முடியாது. இந்த நிலையில் குர்ஆன் சொல்லும் உறுதி மொழியைக் கேளுங்கள்.
பேராற்றல் கொண்ட அவன் அடியார்களுக்கு பெண் மக்களை கொடுக்கிறான்; ஆண் மக்களைக் கொடுக்கிறான். ஆண், பெண் மக்களை கலந்தும் கொடுக்கிறான். குழந்தை விஷயத்தில் ஒருவருக்கு தாமதம் ஏற்படுகிறது என்றால், அதன் பின்னணியில் நியாயமான காரணம் இருக்கும். அதுவரை பிரார்த்தனையில் ஈடுபடுங்கள். உங்களின் துஆக்களை அவன் விரும்புகிறான். குழந்தை பிறப்புக்கான சரியான நேரத்தை அவன் அறிவான். பிறருடைய ஏளன பேச்சை பொருட்படுத்தாதீர்கள்.
குழந்தையை கொடுத்து உங்களின் மனதை குளிர்விக்க அவன் போதுமானவன்.
