தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இஸ்லாம்/கதைகள்/அவன் ஒருவனே

அவன் ஒருவனே

அவன் ஒருவனே


ADDED : அக் 22, 2026 12:35 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 22, 2026 12:35 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஒருமுறை மரத்தின் நிழலில் ஒதுங்கினார் நபிகள் நாயகம். மரக்கிளையில் தன்னிடம் இருந்த கத்தியை தொங்க விட்டு துாங்கத் தொடங்கினார்.

அதைக் கண்ட எதிரி ஒருவன் கிளையில் இருந்த கத்தியை எடுத்து நாயகத்தின் மார்பின் மீது வைத்தான். பின்னர் அவரை எழுப்பி, ''உம்மைக் காப்பாற்ற இங்கு யாருமில்லையே'' என்றான்.

அவரோ பயப்படவில்லை. ''இறைவன் என்னைக் காப்பாற்றுவான்'' என்றார். உடனே பலத்த காற்று வீச புழுதி கிளம்பியது. எதிரியின் கண்ணில் துாசி விழுந்தது.

அந்த கத்தியை எடுத்த நாயகம், ''இப்போது சொல். உன்னைக் காப்பாற்றுபவர் யார்'' எனக் கேட்டார்.

அதற்கு அவன், ''நீங்கள் தான்'' என்றான்.

நாயகம் சிரித்தபடியே, ''உன்னையும் என்னையும் காப்பாற்றுபவன் அவன் ஒருவனே. துாங்குபவரிடம் வீரத்தைக் காட்டுவது அழகல்ல'' என உபதேசித்து அனுப்பினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us