ADDED : அக் 29, 2026 01:20 PM
அ நிறம் | அளவு
மேதை இமாம் மாலிக், மெதீனாவில் மார்க்க கல்விக்கான வகுப்பு நடத்திக் கொண்டிருந்தார். அந்த வகுப்பில் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த யெஹ்யா என்ற மாணவர் இருந்தார். அந்த நேரத்தில் தெருவழியாக யானை ஒன்று சென்றது. மாணவர்கள் யானையைப் பார்க்க வெளியே ஓடினர். ஆனால் யெஹ்யா பாடத்திலேயே கவனமாக இருந்தார்.
இதைப் பார்த்த இமாமுக்கு ஆச்சர்யம். ''யெஹ்யா... உன் நாட்டில் யானை கிடையாதே... நீயும் பார்க்க போகலாமே'' எனக் கேட்டார்.
அதற்கு யெஹ்யா, ''யானையை வேடிக்கை பார்க்க நான் இங்கு வரவில்லை. தங்களிடம் மார்க்க சம்பந்தமான விஷயங்களைக் கற்கவே நீண்ட துாரத்தில் இருந்து வந்துள்ளேன்'' என்றார்.
மாணவனின் அருமையான பதிலைக் கேட்டு இமாம் மகிழ்ச்சி அடைந்தார். நீயே புத்திசாலி என வாழ்த்தினார். இவரே பிற்காலத்தில் சிறந்த மார்க்க கல்வியாளராக திகழ்ந்தார்.
