ADDED : அக் 29, 2026 01:22 PM

அ நிறம் | அளவு
இளைஞர் ஒருவர் வயதான அம்மாவை தோளில் சுமந்தபடி காபாவை வலம் வந்து கொண்டிருந்தார். அதைப் பார்த்த ஒரு பெரியவர், ''தம்பி... இவர் உன் அம்மாவா'' எனக் கேட்டார்.
அதற்கு இளைஞர், ''ஆமாம். என் அம்மாதான். பல ஆண்டுகளாக இப்படித்தான் தோளில் சுமந்தபடியே நான் செல்கிறேன். இதன் மூலம் அம்மாவுக்கு மகன் செய்ய வேண்டிய கடமையை நிறைவேற்றியவனாக ஆவேனா'' எனக் கேட்டார்.
''தம்பி... நீ ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து, உன் ஆயுள் முழுவதும் அம்மாவை சுமந்து செல்கிறாய் என வைத்துக் கொள். அப்படி செய்தாலும் உன்னை உன் அம்மா கருவில் ஒருநாள் இரவு சுமந்து இருந்ததற்கு சமம் ஆகாது. அதோடு அவர் ஒருமுறை கொடுத்த தாய்ப்பாலுக்கு இதை விட மேலான பணிவிடைகளைச் செய்தாலும் சமம் ஆகாது. அம்மாவின் தியாகத்திற்கு முன்னால் உன் செயல்கள் அனைத்தும் மிகச் சிறியதே'' என விளக்கம் அளித்தார்.
