தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இஸ்லாம்/கதைகள்/இரக்கம் காட்டு

இரக்கம் காட்டு

இரக்கம் காட்டு


ADDED : அக் 29, 2026 01:27 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 29, 2026 01:27 PM


Follow on Google
அ நிறம் | அளவு

இறை நம்பிக்கையாளரான ஷிப்லியின் சீடர்களில் ஒருவர் கனவு கண்டார். அதில் சுவனத்தில் மகிழ்ச்சியாக அழகான ஆடை, அலங்காரத்துடன் ஷிப்லி இருந்தார்.

''நீங்கள் மகிழ்ச்சியாக இங்கு இருக்கிறீர்களே... எப்படி'' என சீடர் கேட்டார்.

''இறைவனை வணங்கியதால் இந்த உயர்பதவி கிடைத்தது என நினைத்தேன். ஆனால் நான் செய்த நற்செயலும் காரணம்'' என்றார்.

''அது பற்றி சொல்லுங்களேன்'' என்றார் சீடர்.

''குளிர்காலத்தில் பாக்தாத் நகரின் தெருவில் போய்க் கொண்டிருந்தேன். புதர் ஒன்றில் குளிரை தாங்க முடியாமல் பூனைக்குட்டி ஒன்று நடுங்கியபடி நின்றது. உடனே அதை எடுத்து போர்வைக்குள் வைத்துக் கொண்டேன். அது நிம்மதியாக மூச்சு விட்டது. இப்போது என் மீது அவன் இரக்கம் காட்டியதற்கு அதுவே காரணம்'' என்றார்.

மற்றவர் மீது இரக்கம் காட்டுங்கள்; வானத்தில் உள்ளவன் உங்கள் மீது இரக்கம் காட்டுவான்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us