ADDED : நவ 05, 2026 01:06 PM
தோழர்களுடன் பேசிக் கொண்டிருந்தார் நபிகள் நாயகம். அப்போது அங்கு வந்த ஒருவர், ''நான் நோன்பு இருக்கும் நாளில் பாவச் செயல்களில் ஈடுபட்டேன். அதைப் போக்க வழி உண்டா'' எனக் கேட்டார்.
''உங்களிடம் உள்ள அடிமைகளில் ஒருவரை இன்றே விடுதலை செய்யுங்கள்''
''என்னிடம் அடிமை இல்லையே''
''சரி. தொடர்ந்து இரண்டு மாதம் நோன்பிருக்க முடியுமா''
''முடியாது. எனது உடல்நிலை சரியில்லை''
''அப்படியானால்... ஏழைகளுக்கு உணவு அளியுங்கள்''
''அந்த அளவுக்கு பணம் இல்லை''
சிறிது நேரம் மவுனமாக இருந்த நாயகம் தன் தோழர்களிடம், தட்டு நிறைய பேரீச்சம்பழங்களை கொண்டு வரச் சொன்னார். அந்த நபரிடம் கொடுத்து, ''உங்கள் கைகளால் ஏழைகளுக்கு தானம் செய்யுங்கள்'' என்றார்.
''இறைத்துாதரே... என் சொந்த ஊரான மெதீனாவில் எங்களை விட ஏழை யாருமில்லை'' என்றார்.
இதைக் கேட்ட நாயகம் பலமாகச் சிரித்தார். ''பேரீச்சம்பழங்களை உங்கள் குடும்பத்தினருக்கு கொடுத்து நீங்களும் சாப்பிட்டு மகிழுங்கள்'' என்றார்.
