ADDED : நவ 20, 2026 08:17 AM
அ நிறம் | அளவு
சஹ்ல் இப்னு ஹுனைப் அழகானவர். 'அல்-கர்ரார்' என்ற இடத்திற்கு குளிக்கச் சென்றார். அதற்காக ஆடையைக் கழற்றிய போது அருகில் நின்ற ஆமிர் என்பவர் பொறாமையுடன், ''உன்னைப் போல அழகானவரை பார்த்ததில்லை'' என்றார். அதைக் கேட்டவுடன் சஹ்ல் மயங்கி விழுந்தார். அங்கிருந்த சிலர் அவனை துாக்கிச் சென்று நாயகத்திடம் நடந்ததைக் கூறினர்.
உடனே ஆமிரை அழைத்து, 'இறைவன் உங்களுக்கு பரக்கத் (ஆசீர்வதிப்பானாக) செய்வானாக' என சஹ்லைப் பார்த்து சொல்லுங்கள். அவருக்காக நீங்கள் கை, கால்களை கழுவுங்கள்'' என்றார். ஆமிரும் தண்ணீரில் முகம், கைகள், முழங்கை, முழங்கால், பாதம் என உடம்பை கழுவினார். பின்னர் அவருடைய கையால் தொட்ட நீரை சஹ்ல் மீது ஊற்ற அவரும் மயக்கம் தெளிந்தார்.
