தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இஸ்லாம்/கதைகள்/இரக்கம் காட்டு

இரக்கம் காட்டு

இரக்கம் காட்டு


ADDED : நவ 26, 2026 10:33 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 26, 2026 10:33 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நபிகள் நாயகம் மெதீனா நகரில் நடந்து சென்றபோது, முனங்கல் சத்தம் கேட்டது. அங்கு ஒரு ஒட்டகம் பசியால் துடித்ததைக் கண்டார். அதை தடவிக் கொடுத்தார். அதை பார்த்து ஒட்டக உரிமையாளர் வந்தார்.

''நீங்கள் தான் ஒட்டகத்தின் உரிமையாளரா'' என அவர் கேட்டதற்கு தலையாட்டினார்.

''ஏன் இதற்கு உணவு கொடுக்கவில்லை''

''வயதாகி விட்டதால் வேலை செய்யாது. அதனால் உணவு கொடுக்கவில்லை'' என்றார் உரிமையாளர்.

''இளமைக் காலத்தில் இந்த ஒட்டகம் எப்படி இருந்தது''

''சுறுசுறுப்பாக வேலை செய்யும்''

''அப்போது வேலை வாங்கி விட்டு கடைசி காலத்தில் தண்டிக்கலாமா'' என்றார் நாயகம். தலைகுனிந்தார் உரிமையாளர்.

''பிராணிகளிடம் இரக்கம் காட்டுவது அவசியம். இனி தவறு செய்யாதீர்'' என அறிவுறுத்தினார்.

''மன்னியுங்கள். இப்போதே உணவு கொடுக்கிறேன்'' என்றார் உரிமையாளர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us