தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இஸ்லாம்/கதைகள்/உயிர் பிரியும் நேரம்

உயிர் பிரியும் நேரம்

உயிர் பிரியும் நேரம்


ADDED : நவ 26, 2026 10:46 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 26, 2026 10:46 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

  மெதீனாவைச் சேர்ந்த முதியர் ஒருவரின் ஜனாஸாவில் (இறுதி ஊர்வலம்) பங்கேற்றார் நபிகள் நாயகம். உடல் அடக்கம் செய்யப்பட்டதும் அவரது கப்ர் (மண்ணறை) அருகில் அமர்ந்தார். குச்சியால் நிலத்தைக் கீறியதும் தலையை உயர்த்தி, 'கப்ருடைய (மண்ணறை) வேதனையை விட்டு இறைவனிடம் பாதுகாப்பு தேடுங்கள்' என மூன்று முறை கூறி பிரார்த்தனை செய்தார். பின்னர் மரணத் தறுவாயில் இறை நம்பிக்கையாளனின் உயிர் எப்படி பிரியும் என அங்கு உள்ளவர்களிடம் விளக்கினார்.

ஆசைகளை புறக்கணித்து விட்டு அவன் மறுமை பற்றியே சிந்திப்பான். வானில் இருந்து சில மலக்குகள் (வானவர்) அவனிடம் வருவார்கள். அவர்களின் முகங்கள் சூரியனைப் போல பிரகாசமாக இருக்கும். சுவர்க்கத்தில் உள்ள ஆடைகள், நறுமணங்களை ஏந்தியபடி அவர்கள் நிற்பார்கள். அப்போது உயிரைக் கைப்பற்றும் மலக்கு அருகில் வந்து, 'நல்ல ஆத்மாவே... இந்த உடலை விட்டு வெளியேறு' என கட்டளையிடுவார்.

தோல் பையில் இருந்து தண்ணீர் வழிவது போல, ஆத்மா உடலை விட்டு வெளியேறும்.

உடனே மலக்கு அதைக் கைப்பற்றி சுவர்க்கத்தின் ஆடையை கொடுத்து நறுமணம் பூசுவர். பின்னர் மலக்குகள் ஆத்மாவைச் சுமந்தபடி செல்வர்.

முதலாவது வானம் வந்ததும், அங்குள்ள மலக்குகளிடம் வானத்தை திறந்து விடுமாறு வேண்டுவர். அதற்கு, ‘இந்த ஆத்மா யாருடையது? இவருடைய நிலை என்ன?’ எனக் கேட்பார்கள். ‘இன்னாருடைய மகன் இவர். ஸாலிஹான (ஒழுக்கம், இறையச்சம் கொண்டவர்) அடியார்’ என்பதை சொல்வர். உடனே அந்த ஆத்மாவை வரவேற்பர். இப்படி ஆறு வானத்திலும் இதைப்போல் நடக்கும்.  

ஏழாவது வானத்தைக் கடந்ததும், ‘இந்த அடியானுடைய செயல்களை இல்லிய்யீனிலே (நற்செயல் பதிவேடு) பதிந்து விடுங்கள். விசாரணை நாளுக்காக பூமியில் உள்ள இவனுடைய உடலில் ஆத்மாவை சேர்த்து விடுங்கள்’ எனக் கட்டளை இடுவான் இறைவன்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us