மனிதர்களைப் படைத்தபின் அவர்களை நேர்வழி காட்டும் பொறுப்பையும் ஏற்றான் இறைவன். நேரில்வந்து வழிகாட்டினால் மனிதன் தாங்கமாட்டான். எனவே அவர்களில் ஒருவரை தேர்ந்தெடுத்து, தன் சட்டங்களை அருள்வது மட்டுமே சரியான வழி. இவர்களை இறைத்துாதர்கள் என அழைக்கிறோம்.
* துாதர்களாய்த் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் மனிதர்களே தவிர, இறைவனோ, அவனது அவதாரமோ அல்ல.
* அவனிடம் இருந்து திருச்செய்தி (வஹீ) அறிவிக்கப்படுகிறது என்பதைத் தவிர, அவர்களுக்கும் மற்ற மனிதர்களுக்கும் எந்த வேறுபாடும் இல்லை.
* எந்த ஒரு துாதரும் தன்னை வணங்கும்படியோ, தான் இறைவனின் ஓர் அம்சம் என்றோ பரப்புரை செய்யவில்லை. மாறாக அவனுக்கு அடிபணிந்து வாழுங்கள் என்றுதான் அறிவுறுத்தினார்கள்.
* இந்தப் பணிக்காக மக்களிடம் அவர்கள் எந்தக் கூலியையும் எதிர்பார்க்கவில்லை. காணிக்கைகள், நேர்ச்சைகள், தான தர்மங்களை அவர்கள் ஏற்றுக்கொள்வதில்லை.
இதற்கு எடுத்துக்காட்டாக குர்ஆன் கூறுவதைப் பாருங்கள்.
'(நபியே) நீங்கள் சொல்லுங்கள்: 'நிச்சயமாக நான் உங்களைப் போன்ற ஒரு மனிதனே. எவர் இறைவனைச் சந்திக்க விரும்புகிறாரோ, அவர் நற்செயல்களைச் செய்யட்டும்.'