நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* போதும் என்ற மனதுடன் வாழ்வதே நிறைவான செல்வம்.
* வீண் விரயம் செய்வோரை இறைவன் நேசிப்பதில்லை.
* பெண்களிடம் நல்ல முறையில் நடந்து கொள்ளுங்கள்.
* இடது கையால் எதையும் வாங்கவோ, கொடுக்கவோ வேண்டாம்.
* ரகசியமாகச் செய்யப்படும் தர்மம் இறைவனின் கோபத்தை தணிக்கும்.
* பொய் சாட்சி அளிப்பது பெரும் பாவங்களில் ஒன்று.
* தண்ணீர், நெருப்பு, மேய்ச்சல் நிலம் அனைவருக்கும் பொதுவானது.
* மானக்கேடான செயல்களின் அருகே செல்லாதீர்கள்.
* நற்பணியாற்றுங்கள். இறையருளால் வெற்றி பெறுவீர்கள்.
* பொறுமை மிக்கவர்கள் இறைவனின் நேசத்திற்கு உரியவர்கள்.
- நபிகள் நாயகம்

