ADDED : டிச 17, 2020 05:36 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* போதும் என்ற மனதுடன் வாழ்பவருக்கு நிம்மதி இருக்கும்.
* உழைத்து தேடிய பொருளில் குடும்பத்தினருக்கு செலவழியுங்கள்.
* பக்கத்து வீட்டினர் மீது அன்பு காட்டுங்கள்.
* இறைவனைப் பற்றிய எண்ணம் இதய அழுக்கைப் போக்கும்.
* ஏழைகளை நேசிப்பது சொர்க்கத்தின் திறவு கோல்.
* நதிக்கரையில் இருந்தாலும் கூட தண்ணீரை வீணாக்காதீர்.
* தேவைக்கு மேல் பணம் சேர்க்க வேண்டாம்.
* பெருமைக்காக ஆடை அணிந்தால் வறுமை உண்டாகும்.
* வீண் செலவும், ஆடம்பரமும் இல்லாத முறையில் உண்ணுங்கள்.
* நல்ல எண்ணத்தால் சிறிய நன்மைகளும் பெரிய நன்மைகளாக மாறி விடும்.
* கடன் கொடுத்து உதவுவதும் தர்மமே.
* சண்டை சச்சரவை சமாதானம் மூலம் தீர்க்க முயலுங்கள்.
- நபிகள் நாயகம்