sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 10, 2025 ,புரட்டாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இஸ்லாம்

/

கட்டுரைகள்

/

இது பெண்கள் விஷயம்

/

இது பெண்கள் விஷயம்

இது பெண்கள் விஷயம்

இது பெண்கள் விஷயம்


ADDED : பிப் 23, 2016 11:18 AM

Google News

ADDED : பிப் 23, 2016 11:18 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெண்களின் பெருமை மற்றும் அவர்களிடம் நடந்து கொள்ள வேண்டிய முறை தொடர்பாக நபிகள் நாயகம் சொல்வதைக்கேளுங்கள்.

* உலகிலுள்ள பொருள்கள் அனைத்தும் நலம் பயப்பனவாகும். அவைகளில் மிகச்சிறந்த நலம் தருவது நற்செய்கை நிறைந்த நங்கையே.

* உங்களது உறவினர்களில் இருந்து நல்லொழுக்கமும், மார்க்கப்பற்றும் உள்ள பெண்கள் கிடைத்தால் அப்பெண்ணைத் திருமணம் செய்து

கொள்ளுங்கள். அப்பெண்மணி ஏழையாக இருப்பினும் சரியே. இவ்விதம் ரத்தக்கலப்பிலுள்ள அந்த ஏழைப்பெண்ணை நீங்கள் மணம் முடிக்காவிட்டால், பூமியில் குழப்பமும் பகையும் அதிகரிக்கும்.

* ஒரு உண்மை விசுவாசிக்கு பயபக்தியும், நல்லொழுக்கமும் உள்ள வாழ்க்கைத்துணையை விட வேறு சிறந்த பாக்கியம் கிடையாது. அவள் இவனது கட்டளைகளுக்கு கீழ்ப்படிந்து நடப்பவளாக இருக்க வேண்டும்.

* பெண்களின் மீது மீண்டும் மீண்டும் பார்வையைச் செலுத்தாதீர்கள். நீர் முதலில் பார்க்கும் பார்வை இயல்பாக நிகழக்கூடியதாகும். இரண்டாவது தடவை பெண்களின் மீது பார்வையைச் செலுத்துவதற்கு அனுமதியில்லை. அது பாவமாகக் கருதப்படும்.

* அன்னியப்பெண்களை வீணே பார்த்து ஆசைகொள்ளும் ஆண்களின் மீதும், அன்னிய ஆண்மக்கள் தன்னைக் கண்டு யாசிக்கக்கூடும் என்ற நோக்கத்துடன் தன்னை சிங்காரித்துக் காட்டித் திரியும் பெண்மக்களின் மீதும் அல்லாஹ்வின் சாபம் ஏற்படுகிறது.

* மாதர் குலமணிகள் மறைவான இடத்தில் இருக்க வேண்டியவர்கள். அவர்கள் வெளிக்கிளம்பி செல்வார்களேயானால், சாத்தான் அவர்களை பிற ஆடவர்களின் கண்களுக்கு மிக அழகாகச் சிங்காரித்துக் காட்டுகிறான்.

* பெண்ணை நன்றாக நடத்துமாறு ஆண்டவன் ஆணையிடுகின்றான். ஏனெனில், அவர்களே உங்கள் அன்னையராகவும், அருமைப் புதல்விகளாகவும், அத்தைகளாகவும் இருக்கின்றார்கள்.

* திருமணம் செய்யும் முன்பு முதலில் பெண்ணைப் பாருங்கள். இதுதான் உங்களிடையே அன்பை ஏற்படுத்தும். ஒரு பெண்ணை

கட்டாயப்படுத்தி திருமணம் செய்யக்கூடாது. பெண்கள் தங்களுக்கு பிரியமில்லாதவரை திருமணம் செய்யக்கூடாது. விதவைப் பெண்ணிடம் ஒப்புதல் பெறும் வரையிலும், கன்னிப்பெண்ணிடம் அனுமதி பெறும் வரையிலும் திருமணம் செய்து வைக்கக்கூடாது.

* கணவனுக்கு ஏற்ற மனைவி என்பவள் அவனது கட்டளைக்கு கீழ்ப்படிவாள். ஆசையுடன் கணவன் பார்ப்பானேயானால், அவனது ஆசைக்கு இணங்கி விடுவாள். அவனுக்கு கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றுவாள். அவன் வெளியில் சென்றுவிட்டால் அவள் தன்னுடைய கற்பையும், பொருளையும் பாதுகாப்பாள்.

* மணமகனே! திருமணத்தால் மணமகளின் மானத்தை நீ ஹலாலாக்கிக் கொண்டாய். ஆகவே, அப்பெண்மணிக்கு உணவு, உடை முதலியவற்றை ஒழுங்காகக் கொடுத்து பணிவன்புடன் நடத்துவாயாக!

* எந்தப்பெண் தனது கணவனின் கோபத்தை கிளரும்படி பேசுகிறாளோ, அவளுடைய பெயர் பாவிகளுடைய பட்டியலிலும், இணை வைப்பவர்களின் (கடவுளுக்கு நிகரானவர் என்று சொல்வோர்) கூட்டத்தினருடனும் எழுதப்படும். நரகத்தில் அவளுடைய தங்கும் இடத்தை குறிப்பிட்ட பின்புதான் அவள் மரணம் அடைவாள்.






      Dinamalar
      Follow us