ADDED : ஆக 10, 2021 10:09 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பிறருக்கு உதவி செய்தால்தான் உலகம் நம்மை மதிக்கும். பெரிய மேதையாக இருந்தாலும் உதவி செய்யவில்லை என்றால் கஞ்சன் என்றுதான் சொல்வார்கள்.
* எண்ணத்தை பொறுத்தே செயல் அமையும்.
* கஞ்சனாக வாழ்ந்துவிட்டு, மரண வேளையில் வள்ளலாக மாறினாலும் பயன்இல்லை.
* தொழுகை செய்பவராக இருந்தாலும் கஞ்சனாக இருந்தால் பாவியாவான்.
* கருணை உள்ளவன் தங்கும் இடம் சொர்க்கம். கஞ்சத்தனம் உள்ளவன் தங்குமிடம் நரகம்.
* கஞ்சத்தனம், தற்பெருமை, பேராசை ஆகிய குணங்கள் ஒருவனை நாசப்படுத்தும்.
* தர்மம் செய்து உங்களை காத்துக்கொள்ளுங்கள்.
சிக்கனம் அவசியம். ஆனால் கஞ்சனாக இருக்காதீர்கள். எல்லோருக்கும் உதவி செய்து அவர்களின் அன்பை பெறுங்கள்.

