
* சோதனையை பொறுத்துக் கொள்பவர் பாக்கியம் பெற்றவர்.
* சிறிய செயலாக இருந்தாலும் அதை தொடர்ந்து செய்யுங்கள்.
* எவர் மென்மையை இழந்துவிடுகிறாரோ அவர் நன்மைகள் அனைத்தையும் இழந்து விடுகிறார்.
* தவறு செய்பவர்களை மன்னியுங்கள்.
* சண்டையில் பிறரை வீழ்த்துபவன் வீரன் அல்ல. கோபத்தை அடக்குபவனே வீரன்.
* மதுபானம் பரிமாறப்படும் விருந்தில் கலந்து கொள்ளாதீர்கள்.
* மிருகங்களை ஒருபோதும் சித்திரவதை செய்யாதீர்கள்.
* இருவருக்கு இடையில் அவர்களின் அனுமதியின்றி அமரக்கூடாது.
* சேவலை திட்டாதீர்கள். அது காலையில் உங்களை எழுப்புகிறது.
* இறந்தவர் செய்த நன்மைகளை நினையுங்கள். அவர்கள் செய்த தீமையை மறந்து விடுங்கள்.
* நேர்மையான வழியில் செல்லுங்கள். யாருடைய தீங்கும் உங்களை பாதிக்காது.
* உலகத்தவரின் எண்ணங்கள் பணம் இருக்கும் இடம் நோக்கியே செல்லும்.
* நீங்கள் செய்த நன்மையை சிந்திப்பதை விட நீங்கள் செய்த பாவங்களை சிந்தியுங்கள்.
* கல்வி கற்பது ஒவ்வொருவரின் கடமை.
- பொன்மொழிகள்

