
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* போதும் என்ற மனதுடன் வாழ்பவருக்கு நிம்மதி உண்டாகும்.
* தேவைக்கு மேல் அதிகமாக பொருளை சேர்க்க வேண்டாம்.
* பிறரிடம் யாசகம் கேளாமல் உங்களைக் காத்துக் கொள்ளுங்கள்.
* உழைத்து தேடிய பொருளில் குடும்பத்தினருக்கு செலவழியுங்கள்.
* பக்கத்து வீட்டினர் மீது அன்பு காட்டுங்கள்.
* இறைவனைப் பற்றிய நினைவு இதய அழுக்கைப் போக்கும்.
* உறவினரை அலட்சியம் செய்தால் அன்பை இழக்க நேரிடும்.
* கொடையாளியின் உணவு மருந்தாகும். கஞ்சனின் உணவு நோயாகும்.
* செல்வந்தர்களை அலட்சியம் செய்யாதீர். உலகத்தை இழந்து விடுவீர்.
* சொர்க்கத்தில் இருந்து வந்தது அத்திப்பழம். அதை அதிகம் உண்ணுங்கள்.
* வெறும் வயிற்றில் பேரிக்காயை உண்டால் இதயம் பலம் பெறும்.
* குடும்பத்தினரை அலட்சியம் செய்யாதீர். சுகமான வாழ்வை இழப்பீர்.
பொன்மொழிகள்