
தர்மம் செய்வது நன்மை தரும் ஒன்று தான். ஆனால், தடை செய்யப்பட்ட வழியில் வரும் பணத்தினால் தர்மம் செய்வது பயன் தராது என்கிறார் நபிகள் நாயகம். தர்மம் பற்றி அவர் சொல்பவை.
* ஒரு மனிதன் புனித ஹஜ் யாத்திரை செல்கிறான். இரு கை, ஏந்தி அல்லாஹ்வின் பெயரைச் சொல்லி பிரார்த்தனை செய்கிறான். ஆனால், தடைவிதிக்கப்பட்ட ஆடையை அணிந்துள்ளான். தடை செய்யப்பட்ட உணவை சாப்பிடுகிறான். பானத்தை குடிக்கிறான். அநியாய வழியில் வந்த பணத்தில் வளர்ந்திருக்கிறான். இவனுடைய பிரார்த்தனை அல்லாஹ்வால் எப்படி ஏற்கப்படும்?
* ஒருவர் தடை செய்யப்பட்ட வழியில் பொருளைத் தேடி அதைக் கொண்டு தர்மம் செய்தால், அதில் அவருக்கு எந்த நற்கூலியும் இல்லை. அந்த பாவச்சுமையை அவரே தாங்கிக் கொள்கிறார்.
* தடை செய்யப்பட்ட ஒரு உருண்டை உணவு ஒருவனது வயிற்றை அடையுமானால், அவனுடைய தொழுகையை அல்லாஹ் ஏற்றுக் கொள்வதில்லை.இனியாவது தடை செய்யப்பட்ட வழியில் சம்பாதிக்காதீர்கள்.